1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalngam
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (22:25 IST)

டிடிவி தினகரனுக்கு காய்ச்சலை வரவழைத்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு

டிடிவி தினகரனுக்கு காய்ச்சலை வரவழைத்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு
அதிமுகவின் இரண்டு அணிகளாக பிரிந்திருந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்று ஒருங்கிணைந்து ஓபிஎஸ் துணை முதல்வர் பதவியையும் ஏற்றுக்கொண்டுவிட்டார். இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் சசிகலா, கட்சியில் இருந்தும் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என்று தெரிகிறது.



 

 
 
இந்த நிலையில் டிடிவி தினகரன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்கள், ஒருங்கிணைந்த அதிமுகவிற்கு தாவ அதிக வாய்ப்பு இருப்பதாகவும், நான்கு வருட எம்.எல்.ஏ பதவி சுகத்தை அனுபவிக்க இதுவொன்றே வழி என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனால் கோடிக்கணக்கில் செலவு செய்து கட்சியை தனது பிடியில் வைத்து கொள்ளலாம் என்ற தினகரனின் கனவு தவிடுபொடியாகிறது. இந்த நிலையில் தினகரனின் கருத்தை கேட்க மீடியாக்கள் அவரை வலைவீசி தேடி வந்த நிலையில் அவரே டுவிட்டரில் மீடியாக்காரர்களுக்கு ஒரு செய்தியை தெரிவித்துள்ளார்
 
தினகரன் தனது டுவிட்டரில், 'மீடியா நண்பர்களுக்கு... காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ளதால், மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்கிறேன். 23ந் தேதி உங்களை சந்திக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். மழை பெய்ததால் காய்ச்சலா? அல்லது ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பால் காய்ச்சலா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.