தொடர்புடைய செய்திகள்
- அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கிடையாது: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
- பணம் பாதாளம் வரை பாய்ந்தது: ஈரோடு கிழக்கு தொகுதி தோல்வி குறித்து ஜெயக்குமார்
- அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை!
- அதிமுக தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பு: ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம்..!
- ஈரோடு கிழக்கில் பணநாயகத்திற்கு வெற்றி, ஜனநாயகத்திற்கு தோல்வி: தென்னரசு
இரட்டை இலை இல்லையென்றால் டெபாசிட் போயிருக்கும்: டிடிவி தினகரன்
இரட்டை இலைஇல்லையென்றால் அதிமுகவுக்கு டெபாசிட் போய் இருக்கும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் போது செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு மிகவும் கஷ்டப்பட்டு தான் டெபாசிட் தொகையை பெரும் அளவுக்கு வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வி குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறிய போது திமுகவுக்கு நிகராக அதிமுகவினரும் பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்றும் இரட்டை இலை சின்னம் கிடைத்தும் அவர்கள் படுதோல்வி அடைந்திருப்பது பார்க்கும்போது இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் டெபாசிட் போய் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஆட்சி அதிகாரம் இருந்தபோது திமிர் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதால் தான் மக்கள் வெறுப்பின் காரணமாக அதிமுக தோல்வி அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். துரோகத்தினால் வளர்ந்து வரும் இந்த கட்சி கட்சிக்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும் காலம் நிச்சயம் அவர்களுக்கு தகுந்த தண்டனையை கொடுக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அதிமுக தலைவர்களை வசப்படுத்தி வைத்திருப்பதாலோ தொண்டர்கள் எல்லோரும் என் பின்னால் தான் இருக்கின்றார்கள் என்று சொல்வதாலோ எடப்பாடி பழனிச்சாமி ஒரு தலைவராக முடியாது என்றும் அவர் தெரிவித்தார்
Edited by Mahendran
