1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 3 மார்ச் 2023 (17:24 IST)

பணம் பாதாளம் வரை பாய்ந்தது: ஈரோடு கிழக்கு தொகுதி தோல்வி குறித்து ஜெயக்குமார்

Jayakumar
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினரின் பணம் பாதாளம் வரை பாய்ந்தது என தோல்விக்கு விளக்கம் அளித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் சுமார் 60,000 வாக்கு வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் தென்னரசு தவிர 75 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுகவின் தோல்வி குறித்து பேட்டி அளித்த முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என்றும் அதிமுக மகத்தான வெற்றியை வருங்காலத்தில் பெரும் என்றும் தெரிவித்தார். 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பொருத்தவரை அதிமுகவை கண்டு பிற கட்சிகள் அச்சமடைந்தன என்றும் எந்த தேர்தலிலும் இதுபோல் திமுக பயந்தது கிடையாது என்றும் தெரிவித்தார். 
 
தினமும் 350 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது என்றும் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran