அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை!
அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்த நிலையில் அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணை நடைபெற உள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் பிஎச் மனோஜ் பாண்டியன் தொடர்ந்த இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர்களை நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பில் என்ன முடிவு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva