1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Dinakaran says about dmk government

வழக்கம்போல மக்களை ஏமாற்றும் திமுக அரசு: முதியோர் உதவித்தொகை குறித்து டிடிவி தினகரன் விமர்சனம்..!

டிடிவி தினகரன்
முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகையை வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி வழங்கி, வழக்கம்போல மக்களை ஏமாற்றும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது  திமுக வெளியிட்ட வாக்குறுதியில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் உதவித் தொகையை ரூ.1000- இல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பொய் வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி ரூ.1200 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 
 
அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை தினந்தோறும் உயர்ந்து வரும் நிலையில் தற்போது அளிக்கப்பட்டு வரும் உதவித்தொகையே  போதாத போது முதியோர் மற்றும்  கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகையை ரூ.200 மட்டும் உயர்த்துவது எந்தவகையிலும் நியாயம் ஆகாது. எனவே வாக்குறுதி அளித்ததைக் காட்டிலும் உதவித்தொகையை  ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி