1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (16:45 IST)

மாமல்லபுரத்தில் நாளை முதல் ட்ரோன்கள் பறக்கத்தடை: அதிரடி அறிவிப்பு..!

மாமல்லபுரத்தில் நாளை முதல் ட்ரோன்கள் பறக்கத்தடை: அதிரடி அறிவிப்பு..!
மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாட்டு நிகழ்வுகள் நடைபெற இருப்பதை அடுத்து நாளை முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜி 20 மாநாடு நிகழ்வுகள் வரும் திங்கட்கிழமை முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் விடுதிகள் உள்ள பகுதிகள், பயணம் செய்யும் வழித்தடங்கள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை என காவல்துறை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran