வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜூலை 2023 (12:03 IST)

இஸ்லாமிய புத்தாண்டு கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்: டிடிவி தினகரன்

இஸ்லாமிய நாட்காட்டியின்படி இன்று புத்தாண்டை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
இஸ்லாமியர்களின் வரலாற்றிலும் வாழ்க்கையிலும் செல்வாக்கு பெற்றதாகத் திகழும் முஹர்ரம் மாதத்தில்தான் முகமது நபி (ஸல்) அவர்களும், தீர்க்கதரிசிகளும் பிறந்தனர் என்று சொல்லப்படுகிறது.
 
புனிதமான முஹர்ரம் மாதத்தில் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையுடன் திகழ வேண்டும் என்று வலியுறுத்திய நபிகள் நாயகம் அவர்களின் வழியில் அன்பு, அறத்தை பின்பற்ற இந்நாளில் உறுதி ஏற்போம். 
 
Edited by Mahendran