1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (15:41 IST)

இதுக்குதான் கள்ள மௌனம் சாதிச்சீங்களா? – அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி!

தமிழக அரசு ரேபிட் கிட் வாங்கிய விவகாரத்தில் அதன் விலை மிகவும் குறைவானது என நீதிமன்றம் மூலம் தெரிய வந்ததை தொடர்ந்து டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சீனாவிடமிருந்து ரேபிட் கருவிகளை தமிழகம் வாங்கியது. சீனாவிலிருந்து 5 லட்சம் ரேபிட் கருவிகளை இந்தியாவிற்கு வாங்கி வழங்குவதில் ஆர்க் பார்மசூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதேசமயம் தமிழக அரசும் இதே ரேபிட் கிட்டை ஷான் பயோடெக் என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு முழுவதுமாக தாங்கள் ரேபிட் கிட் விநியோகத்திற்கு அனுமதி பெற்றிருப்பதாக ஆர்க் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு குறித்த விசாரணையில் ஒரு ரேபிட் கிட் ரூ.245 என்ற ரீதியில் வாங்கி அதை அரசியம் ரூ.600க்கு விற்றதாக தெரிய வந்துள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக தமிழக அரசு வாங்கிய ரேபிட் கிட் கருவியின் விலை வரியுடன் சேர்த்து ரூ.675 என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள அமமுக தலைவர் டிடிவி தினகரன் “முகவர் மூலம் வாங்கியது என்றால் சீனாவிடமிருந்து நேரடியாக வாங்கியதாக முதல்வர் சொன்னது பொய்தானே? ஷான் பயோடெக் என்ற டீலரை அணுகியது யார்? ரேபிட் கருவியின் உத்தேச விலையை கூட கேட்காமல் வாங்க முனைந்தது ஏன்?” பல கேள்விகளை முன்வைத்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.