செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (18:40 IST)

விவசாயியின் ஒரே ஒரு டுவீட்: ஒரு லட்சம் முட்டைகோஸ்களை வாங்கிய எம்பி

ஒரு லட்சம் முட்டைகோஸ்களை வாங்கிய எம்பி
தமிழக விவசாயி ஒருவர் 3.5 ஏக்கரில் முட்டைகோஸ் விளைவித்து இருப்பதாகவும் இந்த ஊரடங்கு காரணமாக அதனை வாங்க யாரும் முன்வரவில்லை என்றும் எனவே தன்னுடைய நிலத்தில் விளைந்த முட்டைகோஸ்களை யாராவது வாங்கி தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 
சத்தியமங்கலத்தை சேர்ந்த கண்ணையன்  என்ற இந்த விவசாயியின் கோரிக்கையை பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா  ஏற்று கொண்டார். அவர் நிலத்தில் விளைந்த மொத்த முட்டைகோஸையும்  கொள்முதல் செய்து தனது தொகுதி மக்களுக்கு அவைகளை இலவசமாக கொடுத்தார்..
 
பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா செய்த இந்த உதவியால் நெகிழ்ந்த போன சத்தியமங்கலம் விவசாயி கண்ணையன், எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார். தமிழக விவசாயி ஒருவருக்கு கர்நாடக எம்பி ஒருவர் உதவி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.