அரசுக்கே அதிக விலைக்கு விற்கப்பட்டதா ரேபிட் கிட்? – நீதிமன்றம் வருத்தம்!
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் அரசிடம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனா பாதிப்புகளை கண்டறிய ரேபிட் கிட் கருவிகளை சீனாவிடம் ஆர்டர் செய்திருந்தது இந்தியா. சீனாவிலிருந்து 5 லட்சம் ரேபிட் கருவிகளை இந்தியாவிற்கு வாங்கி வழங்குவதில் ஆர்க் பார்மசூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதேசமயம் தமிழக அரசும் இதே ரேபிட் கிட்டை ஷான் பயோடெக் என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு முழுவதுமாக தாங்கள் ரேபிட் கிட் விநியோகத்திற்கு அனுமதி பெற்றிருப்பதாக ஆர்க் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு குறித்த விசாரணையில் ஒரு ரேபிட் கிட் ரூ.245 என்ற ரீதியில் வாங்கி அதை அரசியம் ரூ.600க்கு விற்றதாக தெரிய வந்துள்ளது. 60% அதிக விலைக்கு விற்கப்பட்டதை குறித்து உத்தரவிட்ட நீதிமன்றம் வரிகள் உட்பட அனைதையும் சேர்த்து ஒரு கருவி ரூ.400க்கு மட்டுமே விற்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மக்களுக்கு பரிசோதனை செய்ய சோதனைக்கருவிகள் தேவைப்படும் நிலையில் ஏஜெண்சிகளின் விலை நிர்ணயத்தை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.