கர்நாடக அரசு நம்மை பாகிஸ்தானியர்களாக பார்க்கிறது - டிடிவி காட்டம்!
கர்நாடக அரசு மக்களிடம் பிரிவினையை உருவாக்குகிறது என்று போராட்டம் நடத்திய டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி அணையின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேகதாதுவில் புதிய அணை கட்டக் கூடாது என தமிழக அரசு பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கர்நாடக அரசை கண்டித்து டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகள் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.
இதன் பின்னர் டிடிவி தினகரன் பின்வருமறு பேசினார், மக்களிடம் பிரிவினையை உருவாக்கி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுகிறது. கர்நாடக மக்களை நாம் சகோதரர்களாக பார்க்கிறோம். கர்நாடக அரசு நம்மை பாகிஸ்தானியர்களாக நினைக்கிறது என்றும் டிடிவி தினகரன் கூறினார்.