வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (14:19 IST)

திமுகவை தோற்கடித்த அமமுக, அதிமுக கூட்டணி – தேவக்கோட்டையில் ஆச்சர்யம்!

காரைக்குடி அருகே உள்ள தேவக்கோட்டையில் அதிமுக, அமமுக இணைந்து நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை வீழ்த்தியுள்ளது.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து இன்று நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேவகோட்டை நகராட்சியில் திமுக அதிக இடங்களில் வென்றிருந்தது.

இதனால் நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் நின்ற நிலையில் அதிமுக வேட்பாளர் சுந்தரலிங்கம் என்பவரும் எதிர்த்து போட்டியிட்டார். கவுன்சிலர் வாக்குகள் பெறப்பட்ட நிலையில் ஆச்சர்யமாக அமமுக கவுன்சிலர்கள் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். இதனால் திமுக வேட்பாளரை தோற்கடித்து அதிமுகவின் சுந்தரலிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.

சசிக்கலாவையும், டிடிவி தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் அதிமுக – அமமுக கவுன்சிலர்கள் இணைந்து நிகழ்த்தியுள்ள இந்த வெற்றி கவனத்தை ஈர்த்துள்ளது.