1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (15:10 IST)

திமுகவின் இரட்டை வேடம் விரைவில் வெளிவரும் - டிடிவி!

பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது தொடர்பாக டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 
முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தவர்ஃப் பேரறிவாளன் என்பதும் அவருக்கு கடந்த சில மாதங்களாக தமிழக அரசு பரோல் வழங்கி வந்தது என்பதும் தெரிந்ததே.
 
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவுக்கு மத்திய அரசின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தமிழக அரசின் வழக்கறிஞர் திறமையான வாதத்தால் பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்தது. 
 
இந்நிலையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது தொடர்பாக டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ஏழு தமிழர் விடுதலையில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது நிம்மதியளிக்கிறது. இதைத்தொடர்ந்து எஞ்சிய ஆறுபேரும் பிணையில் விடுதலை ஆகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 
 
பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு தமிழரையும், இஸ்லாமிய சிறைக்கைதிகளையும் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை செய்துவிடுவோம் என்று கூறி மக்களை ஏமாற்றிய திமுக இனி எப்போதுமே சிறையிலிருந்து விடுதலையாக முடியாதபடி அரசாணையும் பிறப்பித்தது.
 
திமுகவின் இந்த துரோகத்திற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மருந்து போடுவதாக அமைந்துள்ளது. தமிழ் உணர்வாளர்களும், சிறுபான்மை மக்களும் திமுகவின் இரட்டை வேடத்தை முழுமையாக புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.