1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV dinakaran says Jayalalitha death by nature

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தது எப்படி?? – டிடிவி தினகரன் விளக்கம்!

Tamilnadu
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை தொடங்கியுள்ள நிலையில் டிடிவி தினகரன் இதுகுறித்து பேசியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் கடந்த 2016ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆணையம் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து பேசியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் இறந்தார் என்பதுதான் உண்மை. ஆனால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்ந்து சிலரால் அரசியலாக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
உக்ரைனுக்கு இண்டர்நெட் கொடுத்த எலான் மஸ்க்கிற்கு ஏற்பட்ட சிக்கல்!