டிடிவி தினகரன் கூட சேர்ந்ததில் எந்த சங்கடமும் இல்லை!.. பழனிச்சாமி விளக்கம்!...
சசிகலா தயவால் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின் ஆட்சி மற்றும் கட்சி இரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆகி வந்த பின்னரும் அவரையும், டிடிவி தினகரனையும் கட்சிக்குள் வராமல் பார்த்துக் கொண்டார்.
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்தார் டிடிவி தினகரன். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்ப்பீர்களா? என செய்தியாளர் பலமுறை கேட்டதற்கு அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று உறுதியாக சொன்னார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனும் இணைந்திருக்கிறார். இன்று மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இருவரும் ஒரே மேடையில் சந்தித்து பரஸ்பர மரியாதை செலுத்திக்கொண்டனர். மேலும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக அமமுக தொண்டர்கள் பாடுபடுவார்கள் என டிடிவி தினகரனும் கூறினார்.
இந்நிலையில் இதுபற்றி செய்திகளிடம் விளக்கமளித்த எடப்பாடி பழனிச்சாமி வைகோ திமுக குறித்தும் முக ஸ்டாலின் குறித்தும் எந்த அளவுக்கு விமர்சனம் செய்திருக்கிறார்.. ஆனால் அவர் மீண்டும் திமுகவுடன் கூட்டணி சேரவில்லையா?.. எமர்ஜென்சி, மிசா கொண்டு வந்த காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைக்கவில்லையா?. அறிவாலயத்தில் மேல் தளத்தில் ரெய்டு நடக்க, கீழ் தளத்தில் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது.. அப்படிப்பட்ட கட்சிகளெல்லாம் கூட்டணி வைக்கிற போது எங்களுக்கு எந்தவித சங்கடமும் கிடையாது என சொல்லியிருக்கிறார்.