திமுக அரசு ஒரு Trouble Engine!.. ஸ்டாலின் கமெண்ட்டுக்கு தமிழிசை பதிலடி!...
சென்னை மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மேடையில் பேசிய பிரதமர் மோடி திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது.. ஒரு குடும்பத்திற்காக இங்கே ஆட்சி நடக்கிறது.. அதை மாற்ற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.. ஆட்சி மாற்றத்திற்கான நேரம் இது.. தமிழகத்திற்கு பிஜேபி மற்றும் என்.டி.ஏ எனும் டபுள் இன்ஜின் அரசு ஆட்சிக்கு வரும்..
தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த பாதுகாப்பான ஊழல் அற்ற மாநிலமாக மாற்றுவோம் என பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் கூறியுள்ள டபுள் எஞ்சின் ஒரு டப்பா எஞ்சின்.. தமிழ்நாட்டில் ஓடாது என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் ஸ்டாலினே ஒரு Trouble Engine-ஐ வைத்துக்கொண்டு பிரதமர் மோடியை விமர்சனம் செய்கிறார். மாநில அளவில் மட்டுமின்றி மாநகராட்சிகளிலும் பாஜக வென்று Trible Engine அரசாக போய்க் கொண்டிருக்கிறது.. பஞ்சாயத்து தேர்தலை கூட நடத்த பயந்து, போதை, கடன், பாதுகாப்பின்மை கொண்டது உங்கள் Trouble Engine' என விமர்சித்திருக்கிறார்.