1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ttv diankaran removed kamaraj from ammk

விஜயை புகழ்ந்து பேசிய அமமுக எம்.ஏல்.ஏ காமராஜ் நீக்கம்!.. டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!...

ttv kamaraj
தவெக ஆட்சியமைக்க போதுமான எம்எல்ஏக்கள் இல்லாத போது அமமுக எம்.எல்.ஏ காமராஜ் தவெகவுக்கு ஆதரவாக கடிதம் கொடுத்தார். ஆனால், அந்த கடிதம் போலி என டிடிவி தினகரன் ஆளுநரிடமும் புகார் கொடுத்தார். இதையடுத்து தவெகவுக்கு ஆதரவாக காமராஜ் கடிதம் எழுதும் வீடியோவை தவெக வெளியிட்டது..

அதன்பின் தவெகவுக்குபோதுமான ஆதரவு கிடைத்து. அந்த கட்சி தற்போது ஆட்சி அமைத்துவிட்டது. விஜயின் தமிழகத்தின்  முதல்வராகிவிட்டார். இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய அமமுக எம்.எல்.ஏ காமராஜ் விஜயை புகழ்ந்து பேசினார்.. கடந்த மூன்று நாட்களில் விஜய் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கும், அறிவித்த திட்டங்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

முன்பைவிட சென்னை இப்போது சுத்தமாக இருக்கிறது என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்.. இந்நிலையில், காமராஜை அமமுகவிலிருந்து தினகரன் நீக்கியிருக்கிறார். கட்சியின் நிலைப்பாட்டை மீறி சட்டமன்றத்தில் தன்னிச்சையாக தவெகவுக்கு காமராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். கட்சியின் குறிக்கோள்களுக்கு கோட்பாடுகளுக்கு முரண் என்பதால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் காமராஜ் நீக்கம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். அனேகமாக காமராஜ் விரைவில் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
சிவி சண்முகம், எஸ்பி வேலுமணியை சந்தித்த முதல்வர் விஜய்.. எடப்பாடியாருக்கு ஷாக்?