தொடர்புடைய செய்திகள்
- நீட் மறுதேர்வுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டுமா? தேசிய தேர்வு முகமை சொல்வது என்ன?
- விஜயின் ஜோசியருக்கு அரசுப்பதவி!. இட்ஸ் ராங்க் புரோ!.. கலாய்க்கும் ரசிகர்கள்!....
- சொந்த மாவட்டத்தில் என்ன பண்ணி கிழிச்சீங்க?!.. சிவி சண்முகம், வேலுமணியை கிழித்த அதிமுக1..
- 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தடை: நீதிமன்றம்
- மது விற்பனை என்பது ஒரு அரசின் பணியாக ஒருபோதும் இருக்கக்கூடாது: கமல்ஹாசன்
இதுக்கு தான் இந்த பொங்கு பொங்குனீங்க தினகரன்? அவரே இப்ப விஜய்யை ஆதரிச்சிட்டார்...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மன்னார்குடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு S. காமராஜ், கட்சியின் விதிகளை மீறி, இன்று சட்டமன்றத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு தனிப்பட்ட ஆதரவை தெரிவித்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அமமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதால் திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Edited by Siva
