1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. trp raja comment about parithabangal

தமிழக முதல்வர் விஜய் அவதூறாக பேசியதற்காக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் முதல்வர் விஜயன் எலும்புகளை உடைப்பேன் என பேசியதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது இதற்கு திமுக க

trp raja
தமிழக முதல்வர் விஜய்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதற்காக திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். முதல்வர் விஜயின் எலும்புகளை உடைப்பேன் என அவர் பேசியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. தற்போது மார்க்கண்டேயன் சிறையில் இருக்கிறார். மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரின் மகன் முதலில் ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசிய ஸ்டைல் தசாவாதரம் படத்தில் இடம் பெற்ற பல்ராம் நாயுடு கமல் பேசுவது போல இருக்கிறது என அப்போது விஜய் ரசிகரகள் ட்ரோல்செய்தனர்.

ஒருபக்கம், கடந்த வாரம் வெளியான பரிதாபங்கள் நிகழ்ச்சியில் சுதாகர் மார்க்கண்டேயனின் மகனைப் போலவே பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ‘தன்னுடைய தந்தைக்கு நடந்த அநீதியால் மனவேதனையை, தனது உணர்வுகளை வெளிப்படுத்திய  ஒரு சிறுவனை குறி வைத்து பரிதாபங்கள் செயல்பட்டது அருவருப்பாக உள்ளது.

இந்த திறமையான கலைஞர்களின் நீண்ட நாள் ரசிகனாக இருந்த நான் ஒரு குழந்தை தங்கள் துயரமான நேரத்தில் இருக்கும்போது இவ்வாறு நடந்து கொண்டதை பார்த்து மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்’ என சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.


About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
உச்சநீதிமன்றத்தில் ஜாமீன்!. டாஸ்மாக் வழக்கிலும் சிக்காத விஜயபாஸ்கர்!..