1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Gopi sudhakar oh god beautiful movie first look release

சார்லி கெட்டப்பில் பரிதாபங்கள் கோபி& சுதாகர்… Oh God Beautiful படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

கோபி
யுட்யூபில் மிகவும் பிரபலமாக அறியப்படும் கோபி மற்றும் சுதாகர் கிரவுட் பண்டிங் மூலமாக ஒரு படத்தை தொடங்க உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தனர். இதற்காக தங்கள் யூட்யூப் சேனலின் பாலோயர்ஸிடம் இருந்து நிதி கேட்டனர். இதன் மூலம் சில கோடிகள் வரை வசூலானதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படத்தை இன்னும் தொடங்காமல் வேறு ஒரு படத்தை தங்களது பரிதாபங்கள் புரொடக்‌ஷன் மூலமாக தயாரித்து வருகின்றனர்.

அறிமுக இயக்குனர் விஷ்ணு விஜயன் இயக்கும் இந்த படத்துக்கு ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் டைட்டில் டீசர் அனிமேஷன் வடிவில் மூன்று குரங்குகள் வைத்து உருவாக்கப்பட்டு ரிலீஸாகி கவனம் பெற்றது. அதில் 90 ஸ்கிட்ஸ்களின் பிரதிநிதியாக ஒரு குரங்கும், ஜென் Z கிட்ஸ்களின் பிரதிநிதியாக ஒரு குரங்கும் இடம்பெற்று இருந்தது.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகியுள்ளது. இதில் கோபி மற்றும் சுதாகர் ஆகிய இருவரும் சார்லி சாப்ளின் கெட்டப்பில் இருக்கும் விதமாக போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் பர்த்டே கேர்ள் மாளவிகா மோகனன்!