ரிப்பேர் பண்ணி கொடுங்க.. செலவு சமாளிக்க முடியல!.. புலம்பும் அம்மா உணவக ஊழியர்கள்!...
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா காலத்தில் அம்மா உணவகம் கொண்டுவரப்பட்டது. ஏழை, எளியோர் மிகவும் குறைந்த விலையில் உணவருந்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அம்மா உணவகங்களில் காலையில் இட்லி, பொங்கல், மதியம் தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், மாலையில் சப்பாத்தி ஆகியவை குறைந்தவிலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது விஜயின் தவெக அரசு பொறுப்பேற்ற பின் அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் அவ்வப்போது அம்மா உணவகத்துக்கு சென்று ஆய்வு செய்கிறார்கள்.. உணவுகளை சாப்பிட்டு பார்க்கிறார்கள். ஏதேனும் முறைகேடு நடந்தால் உடனே உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது..
இந்நிலையில்தான், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் ஸ்டீம் அடுப்பு பழுதடைந்து பல மாதங்களாக சரி செய்து கொடுக்காததால் அங்குள்ள ஊழியர்கள் கேஸ் அடுப்பை பயன்படுத்தி சமைக்கிறார்கள். இதன் காரணமாக முன்பு போல் வேகமாக சமைக்க முடியவில்லை.. மிகவும் சிரமமாக இருக்கிறது.. ஸ்டீம் அடுப்பை பழுது செய்து கொடுத்தால் எங்கள் வேலை சுலபமாக முடியும். இதற்காக பலமுறை நகராட்சியில் சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் புலம்புகிறார்கள்.
கேஸ் சிலிண்டரில் சமைப்பதால் நேர விரையும் ஏற்படுவதாகவும், சலவை சமாளிக்க முடியவில்லை எனவும் அவர்கள் கூறுகிறார்கள். அதோடு கடந்த ஆட்சியில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தற்போது முறையாக கிடைக்கவில்லை எனவும் அவர்கள் புகார் கூறுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.