1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Call to Modernize Amma Unavagams Utilizing Corporate CSR Funds in Tamil Nadu

அம்மா உணவகங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் தத்தெடுக்கலாம்.. ஸ்டார் ஓட்டல் மாதிரி மாற்றலாம்.. முதல்வர் விஜய்க்கு ஐடியா கொடுக்கும் நெட்டிசன்கள்...

முதலமைச்சர்
கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி தமிழ்நாட்டில் உள்ள பல முன்னணி நிறுவனங்களிடம் பெருமளவில் பயன்படுத்தப்படாமல் முடங்கி கிடக்கிறது. தினமும் தங்களை சந்திக்கும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவித்து, நிறுவனத்திற்கு தலா 100 'அம்மா உணவகங்களை' தத்தெடுக்கச் செய்து, அவற்றை நவீனமயமாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வலுத்து வருகிறது.
 
அரசாங்கத்தின் முழு நிதி சுமையையும் குறைக்கும் வகையில், இந்த சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்தி அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தலாம். நவீன சமையல் உபகரணங்கள், தூய்மையான சூழல் மற்றும் தரமான உணவு விநியோகம் ஆகியவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்போடு உறுதி செய்யும்போது, இந்த திட்டம் புதிய பொலிவை பெறும். ஏழை எளிய மற்றும் அடித்தட்டு மக்களின் பசியை போக்கும் இந்த உன்னத திட்டத்தை கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுடன் இணைப்பது, பொதுமக்களிடையே மிகப் பெரிய நேர்மறையான தாக்கத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
 
தமிழக அரசு இந்த ஆக்கப்பூர்வமான ஆலோசனையை ஏற்று, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து அம்மா உணவகங்களை நவீனப்படுத்த முன்வந்தால், அது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க 'கேம் சேஞ்சராக' அமையும் என்பது உறுதி.
 
Edited by Siva
About Writer
Webdunia