1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (17:42 IST)

தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு பலி.. ஒரு விநாடியில் நடந்த துயர சம்பவம்

ஈரோடு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர், ரயிலில் அடிபட்டு பலியான சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அடுத்த மாவிலிபாளையம் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸாருக்கு, அந்த நபர் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்துபோனது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த மாவிலிபாளையம் போலீஸார், இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.