திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (19:29 IST)

ராமேஸ்வரம் செல்பவர்களுக்கு சிறப்பு ரயில் - ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏற்பாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில் சேவையை வழங்க இருக்கிறது தென்னிந்திய ரயில்வே.

ஆடி அமாவாசை அன்று தமிழ்கத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் உள்ள மக்கள் ராமேஸ்வரத்திற்கு செல்வது வழக்கம். ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளித்தேரில் உலா வரும் வைபவம் மிக பிரசித்தம்.

இந்த வருட ஆடி அமாவாசை ஜூலை 31 அன்று நடைபெறுகிறது. மக்கள் திரள் திரளாக ராமேஸ்வரம் செல்வார்கள் என்பதால் ஜூலை 30 முதல் மதுரையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

முன்பதிவு பெட்டிகள் இந்த ரயிலில் கிடையாது என்பதால் உடனடியாக டிக்கெட் எடுத்து கொண்டு பயணிகள் பயணிக்க ஏதுவாக இருக்கும். இந்த ரயில் ஜூலை 30 இரவு 11.55 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.