1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Local trains stops up to afternoon today

இன்று மதியம் வரை ரயில்கள் இயங்காது..ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

மின்சார ரயில்
பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று குறிப்பிட்ட நேரத்தில் சில மின்சார ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதே போல் சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளட்து எனவும் அந்த அறிவிப்பில் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
நியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… பொது மக்கள் பீதி