1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. traffic change in omr road from tomorrow

OMR சாலையில் நாளை முதல் செயல்படுத்தப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள் இவைதான்..!

road1
OMR சாலையில் நாளை முதல் அதாவது டிசம்பர் 16 முதல் செயல்படுத்தப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்த தகவல்களை சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
• சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படுகின்றன.
 
• காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ் காந்தி சாலையில்) திருப்பிவிடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் பதிய யூ டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.
 
• இதேபோல், கார்ப்பரேஷன் சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய "U" திருப்பத்தில் சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
25 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற எம்.எல்.ஏ.. பதவியை இழந்த பாஜக பிரபலம்..!