செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (10:58 IST)

சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் மாநகரப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை

MTC Buses
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கன மழை பெய்து எடுத்து  ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் தத்தளித்து வந்தன. லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர். 
 
இந்த நிலையில்  புயல் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  
 
ஒரு சில இடங்களில் மழை நீர் தேஙி இருந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது இயல்புநிலை திரும்பி வருவதை அடுத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் பணிக்கு வர தொடங்கி விட்டதாகவும் எனவே அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் வழக்கம் போல் இன்று முதல் இயங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
கடந்த மூன்று நாட்களாக குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்ததால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது  நிம்மதி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran