செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (16:38 IST)

25 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற எம்.எல்.ஏ.. பதவியை இழந்த பாஜக பிரபலம்..!

இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றாலே எம்எல்ஏ எம்பிக்கள் தாங்கள் பதவியை இழந்து விடுவார்கள் என்ற நிலையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் 25 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதை அடுத்து அவர் பதவி இழந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உத்தரபிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ. ராம்துலார் கோந்த்க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சோன்பத்ரா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 
2 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்றதால், மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி எம்.எல்.ஏ. பதவியை கோந்த் இழந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
உபியில் மைனர் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ ராம்துலர் கோண்ட்டேவுக்கு எதிரான வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran