இனிமே தமிழ்நாட்டுக்கு 351 எம்.எல்.ஏக்கள்!.. அண்ணாமலை பேட்டி...
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. அதேபோல் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவால் இந்த எண்ணிக்கை உயரும் என்பது தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால் தமிழ்நாட்டில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 59-ஆக உயரும். தமிழ்நாட்டிலிருந்து பெண்கள் 19 பேர் எம்.பி-ஆவது உறுதி செய்யப்படும்.
அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 351ஆக உயரும். குறைந்தபட்சம் 117 பெண்கள் எம்எல்ஏ பதவியை ஏற்பது உறுதியாகும் என தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 351ஆக உயரும். குறைந்தபட்சம் 117 பெண்கள் எம்எல்ஏ பதவியை ஏற்பது உறுதியாகும் என தெரிவித்திருக்கிறார்.

