தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது: பெங்களூரில் பந்த் நடத்தும் கன்னட மக்கள்..!
- மணல் ஒப்பந்ததாரரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை
- தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் சித்தராமையா அறிவிப்பு..!
- இனி தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை.. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு..!
- கரூரில் அதிகரிக்கும் மணற்கொள்ளை ...
கர்நாடகத்திற்கு லாரிகளை இயக்க வேண்டாம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்
கர்நாடக மாநிலத்திற்கு லாரிகளை இயக்க வேண்டாம் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக மற்றும் கர்நாடக மாநிலம் இடையே கடந்த சில வாரங்களாக காவிரி நதிநீர் விவகாரம் உச்ச கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீரை கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி கன்னட அமைப்புகள் நாளை மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த முழு அடைப்பில் அனைத்து தொழிற்சங்கங்கள் வியாபாரிகள் சங்கங்கள் திரையுலகினர் ஒத்துழைப்பு அளிப்பதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நாளை கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு நடைபெறுவதை அடுத்து தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Edited by Mahendran
