வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2023 (16:47 IST)

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் சித்தராமையா அறிவிப்பு..!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடகா அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என்பதால் காவேரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 
 
 இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா ’கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதாகவும் எனவே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.  
 
இதனை அடுத்து தமிழகம் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran