1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today rain warning to eight districts

இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!

Chennai Rain
தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் அதாவது கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு என அறிவித்துள்ளது.

அதேபோல் நாளைய தினம் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனையடுத்து இன்று மேற்கண்ட எட்டு மாவட்டங்களில் பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வயநாடு நிலச்சரிவு.! 6-வது நாளாக மீட்பு பணி.! உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்..!!