வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (08:31 IST)

கேரளாவில் மீண்டும் கனமழை.. வயநாடு உள்பட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

Mumbai Rains
கேரள மாநிலத்தில் சமீப காலமாக பெய்த கனமழை காரணமாக வயநாடு பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது என்பதும் இந்த நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்டோர் பலியான சோக நிகழ்விலிருந்து இன்னும் கேரளா மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. குறிப்பாக கேரள மாநிலத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள், ஆற்றங்கரை மற்றும் அணைகளின் கீழ் பகுதியில் இருக்கும் பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கேரள மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மாநிலம் முழுவதுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva