புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 நவம்பர் 2021 (10:50 IST)

அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் தற்போது சென்னையில் மழை குறைந்து தென் தமிழக மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு இருக்காது என கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று 2 மணி நேரத்திற்கு கன்னியாக்குமரி, தென்காசி, மதுரை, தேனி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.