1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Govt extend lockdown restrictions to Nivember end

கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30 வரை நீட்டிப்பு! – முதல்வர் அறிவிப்பு!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30 வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் உள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நாளை நவம்பர் 15ல் முடிவடைகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கனமழை காரணமாக டெங்கு உள்ளிட்டவை பரவும் வாய்ப்புள்ளதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்துங்க..! – எஸ்பிஐ வங்கிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!