வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 நவம்பர் 2021 (08:36 IST)

கோவை மாணவி தற்கொலை விவகாரம்; பள்ளி முதல்வர் கைது!

கோவையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்கொலைக்கு முன்னர் மாணவி எழுதியிருந்த கடிதத்தில் அப்பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி குறித்து எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உறவினர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது தேடப்பட்டு வந்த சின்மயா பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.