புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 நவம்பர் 2021 (09:09 IST)

சிறப்பு ரயில்கள் இனி வழக்கமான பெயர்களில் செயல்படும்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் வழக்கமான பெயர்களிலேயே செயல்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த பல மாதங்களாக இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக விமான, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சில வழித்தடங்களில் மட்டுமே ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இனி சிறப்பு ரயில்கள் வழக்கமான அதன் பெயர்கள் மற்றும் வண்டி எண்களிலேயே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது தெற்கு ரயில்வேயில் இயங்கி வரும் 293 ரயில்களும் அதன் வழக்கமான பெயரில் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.