புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 நவம்பர் 2021 (09:57 IST)

வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்துங்க..! – எஸ்பிஐ வங்கிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

வங்கி வாடிக்கையாளர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுமாறு எஸ்பிஐ வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பல வங்கிகள் செயல்பட்டு வந்தாலும் சாமானியர்கள் பலரும் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியில் எஸ்பிஐ முக்கிய இடத்தில் உள்ளது. ஆனால் எஸ்பிஐ உள்ளிட்ட பல வங்கிகள் வாடிக்கையாளர்களை சரியாக மதிப்பதில்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான வழிகாட்டு முறைகளை மேற்கொள்வதில்லை என்றும் புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக வங்கியை கிண்டல் செய்து பல மீம்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பான வழக்கு ஒன்றில் பேசியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை மூலமாக ஊதியம் பெறும் வங்கி ஊழியர்கள் அவர்களுக்கு தேவையான சேவையை செய்து தருவதும், மரியாதையாக நடத்துவதும் அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.