1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today rain chances in Tamilnadu

தமிழகத்தில் 5 மாவட்டங்கலில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகமான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய தகவலின் படி இன்று திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
சென்செக்ஸ் 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது