வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:55 IST)

சம்பளமே தரல.. அதிக வேலை வாங்குறாங்க! – செங்கல்பட்டு பி.எம்.டபிள்யூ பணியாளர்கள் போராட்டம்!

பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யூ சம்பளம் தராமல் அதிக வேலை வாங்குவதாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலக அளவில் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம். இதன் தயாரிப்பு ஆலை செங்கல்பட்டு மஹிந்திரா சிட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 17 மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லையென்றும், மேலும் சில ஊழியர்களை மட்டும் வைத்துக் கொண்டு அதிகமாக வேலை வாங்குவதாகவும் புகார் தெரிவித்து அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.