வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:02 IST)

தமிழ் மக்களின் அன்பு கதாநாயகன்! – கேப்டன் விஜயகாந்துக்கு முதல்வர் வாழ்த்து!

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாள் அவரது தொண்டர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு மற்ற கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ” தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.