1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 ஜனவரி 2023 (08:06 IST)

8 மாதங்களாக மாற்றமில்லா பெட்ரோல் டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

petrol
சென்னையில் சுமார் எட்டு மாதங்களாக அதாவது 238 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
இன்று 239 வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய்  94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை ஒரே விலையில் விற்பனை ஆவது ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு வகையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது 
 
Edied by Siva