1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (10:41 IST)

இவ்வளவு விலையா? பூக்கள் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!

Flower Market
தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் பொங்கல் கொண்டாட உள்ள நிலையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புத்தாடைகள், கரும்பு வாங்குவது என இறங்கியுள்ளதால் கடைவீதிகள் மக்கள் கூட்டமாக உள்ளது. பலரும் சீர் வைத்து கொடுத்தல் உள்ளிட்டவற்றிற்காக அதிக அளவில் பூக்கள் வாங்கி செல்ல தொடங்கியுள்ளதால் பூக்கள் விலையும் அதிகரித்துள்ளது.

கோவை நிலவரப்படி, கடந்த வாரம் ரூ.10க்கு விற்ற தாமரைப்பூ இன்று ரூ.20க்கு விற்பனையாகி வருகிறது. ரூ.300க்கு விற்ற அரளி பூ ரூ.400க்கும், ரூ.60க்கு விற்ற செவ்வந்தி பூ ரூ.140க்கும், ரூ.1500க்கு விற்ற மல்லிகை தற்போது ரூ.3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருவதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூ விலை உயர்வு மலர் வணிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், விலை அதிகரிப்பால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள் குறைந்த அளவிலேயே பூக்கள் வாங்கி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K