1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today petrol and diesel rate

பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

பெட்ரோல்
சென்னை உட்பட இந்தியா முழுவதும் இன்னும் மூன்று மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை.

சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

சென்னை உட்பட இந்தியா முழுவதும் இன்னும் மூன்று மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் டிசம்பருக்கு பின்னரே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

ஆனால் அதே நேரத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டதால் இந்தியாவின் அண்டை மாநிலங்கள் உட்பட பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited By: Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
உடல்நலம்: கருப்பு மரணம் 700 வருடங்களுக்குப் பிறகும் எப்படி மனிதர்களை பாதிக்கிறது?