1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (21:07 IST)

தீபாவளி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம்- அமைச்சர் மனோ தங்கராஜ் டுவீட்

MANO THANGARAJ
பெரம்பலூரில் விலையில்லா வேட்டி, சேலை திட்டட்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்கான பல திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ஏழை ஏளிய மக்களுக்கு தீபாவளி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை இன்று பெரம்பலூரில் மக்களுக்கு தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,  ‘’ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும் தீபாவளி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடங்கி வைத்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

,