1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (11:13 IST)

எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ். : படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

mbbs
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கடைசி தேதி என மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
 
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்பம் செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கிய நடைபெற்றுவருகிறது.
 
இந்த நிலையில்  எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று மாலையுடன் முடிவடைகிறது என மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
 
 நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் www.tnhealth.tn.gov.in    www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று  மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது
 

Edited by Siva