வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (17:56 IST)

எம்பிபிஎஸ் , பிடிஎஸ் படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

mbbs
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கு ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
2022 2023 ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளது மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அதாவது நாளை மறுநாள் முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை ஆன்லைனில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்  படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
wwww.tnhealth.tn.gov.in , www.tnmedicalselection.org ஆகிய இரண்டு இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தகுதி உள்ளவர்கள் இந்த இணைய தளங்களுக்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.