புதன், 1 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified திங்கள், 3 அக்டோபர் 2022 (18:11 IST)

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை: அவகாசம் நீட்டிப்பு

MBBS
எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்றுடன் அவகாசம் முடிவடைந்ததை அடுத்து கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
 எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்னும் பல மாணவர்கள் விண்ணப்பம் செய்யாத நிலையில் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது
 
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த மருத்துவ கல்வி இயக்குனரகம் தற்போது எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 6ஆம் தேதி மாலை 5 மணி வரை நீடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
எனவே இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளுமாறு மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran