1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today corona cases in India

இந்தியாவில் ஒரே நாளில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா! – வேகமெடுக்கும் கொரோனா!

India
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 2 லட்சம் பாதிப்புகளை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,71,202 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,71,22,614 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 314 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,86,066 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,50,85,721 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 15,50,377 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
2 வாரங்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும்! – சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!