1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today corona cases in India

ஒரேநாளில் 18 ஆயிரமாக உயர்ந்த தினசரி பாதிப்பு – இந்தியாவில் கொரோனா!

India
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 18,987 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,40,20,730 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 246 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,51,435 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,33,62,709 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,14,900 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
துர்கா தேவியின் ஆசிர்வாதம் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும்! – பிரதமரின் ஆயுதபூஜை வாழ்த்து!